Daily Horoscope

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

Written By vinoth
Updated: செவ்வாய், 12 நவம்பர் 2024 (14:43 IST)
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.

இந்நிலையில் நாளை மகாராஷ்டிரா அணிக்கெதிராக நடக்கவுள்ள ரஞ்சிக் கோப்பை போட்டியில் அவர் பெங்கால் அணிக்காக ஆடவுள்ளார் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷமி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments