வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2023 (15:52 IST)

இது என்னடா கோலிக்கு வந்த சோதன… சிக்ஸரில் முந்திய ஷமி!

இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி இன்றைய இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களை விளாசினார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி முன்று சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் 25 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்தார். இந்திய அணியின் லெஜண்ட் பேட்ஸ்மேனான கோலி கூட டெஸ்ட் போட்டியில் 24 சிக்ஸர்கள் தான் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக சேவாக் 90 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.