1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami is fit now says bowling Coach

ஷமி எப்போது அணியில் இடம்பெறுவார்?… பயிற்சியாளர் சிதான்ஷு அளித்த பதில்!

இந்தியா
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும் ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அவர் இடம்பெற்றார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஷமி பற்றி பேசியுள்ள பந்துவீச்சு பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் “ ஷமி தற்போது உடல்தகுதியுடன் இருக்கிறார்.  கடைசி மூன்று போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் எடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஏன் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷமி களமிறங்கவில்லை?… வெளியான தகவல்!