1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 6 டிசம்பர் 2022 (08:23 IST)

தாமதமாக தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்! இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்திலேயே தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு சற்று தாமதமாக நாளை தொடங்குகிறது. மொத்தம் 17 அமர்வுகளாக நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே இந்த கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு கேள்விகளை எழுப்ப எதிர்கட்சிகளும் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K