எனக்கே இது ஷாக்காதான் இருக்கு… ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த ஸ்டார்க்!
ஐபிஎல் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு 1.25 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் ஸ்டார்க். அதாவது அவர் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் 5.25 லட்சம் சம்பளமாக பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்க்கின் சக பவுலரான பேட் கம்மின்ஸ் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கபப்ட்டு இருவரும் சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்துள்ளது குறித்து பேசியுள்ள மிட்செல் ஸ்டார்க் “எனக்கே இது அதிர்ச்சியாகதான் இருந்தது. கண்டிப்பாக நான் கனவில் கூட நினைக்காதது இது. நான் இன்னமும் விரும்பப்படுகிறேன் அல்லது தேவையாக இருக்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் கொஞ்சம் அழுத்தம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
உலகின் சிறந்த டி 20 லீக்கில் சிறந்த போட்டியான இன்னிங்சை விளையாட ஆர்வமாக உள்ளேன். ” எனக் கூறியுள்ளார்.