1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Luke jongwe answer to shoe controversial wicket celebration

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

ஜிம்பாப்வே
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று அங்கு ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதல் போட்டியில் ஜுருவ் ஜுரெல் விக்கெட்டை எடுத்த பின்னர் ஜிம்பாப்வே அணி வீரர் லூக் ஜூங்கே அநாகரிகமான முறையில் நடந்துகொண்டார். அவர் ஜூரெல் விக்கெட்டை எடுத்த பின்னர் , தன் காலில் இருந்த ஷூவைக் கழட்டி யாருக்கோ தொலைபேசியில் பேசுவது போன்று செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜோங்வே, “இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுக்கும் போது, அதை எப்படிக் கொண்டாடவேண்டும் என என் காதலியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர்தான் இந்த ஐடியாவை சொன்னார். விக்கெட் விழுந்தால் ஷூவை காதலில் வைத்து எனக்கு போன் செய் என்று அவர் சொன்னார். அதைதான் நான் செய்தேன்” எனக் கூலாக விளக்கமளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!