மலிங்காவுக்கு ஓராண்டு தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!

மலிங்காவுக்கு ஓராண்டு தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!


Caston| Last Modified புதன், 28 ஜூன் 2017 (12:34 IST)
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகராவை குரங்கு என விமர்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதித்துள்ளது.

 
 
நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா, இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்களின் உடல் தகுதி பிரச்சனை காரணமா என விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும் வீரர்களுக்கு கொழுப்பு அதிகமாகி குண்டாகிவிட்டனர் எனவும் விமர்சித்தார்.
 
இதனையடுத்து இலங்கை அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என அமைச்சரை மறைமுகமாக குரங்கு என திட்டினார்.
 
லசித் மலிங்காவின் இந்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து அவர் மீது இலங்கை கிரிக்கெட் அணி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மலிங்காவுக்கு ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மலிங்க தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டும் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :