ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்: 2வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா!

வியாழன், 1 அக்டோபர் 2020 (07:50 IST)
ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் அணி கொடுத்த இமாலய இலக்கான 224 என்ற இலக்கை எளிதில் எட்ட முடிந்த ராஜஸ்தான் அணியால் நேற்று கொல்கத்தா அணி கொடுத்த 175 என்ற இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் நேற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி இன்று திடீரென மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மீண்டும் டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள் காரணமாக தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல் நேற்றைய தோல்வி காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர், பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், மற்றும் சென்னை அணிகள் 4 முதல் 8வது இடங்களில் புள்ளிகள் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments