ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (07:43 IST)

டி 20 போட்டிகளில் அதிக ரன்கள்…. கோலி முதலிடம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் கோலியின் இன்னிங்ஸ் உலக கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசம் கொள்ள செய்துள்ளது. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து அணியை அவர் மீட்டுள்ளார்.

நேற்று 53 பந்துகளில் 82 ரன்களை சேர்த்த அவர் டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த  வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மாவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 102 இன்னிங்ஸ்களில் அவர் 3794 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.