தோனி இல்லாமல் கோலியால் கேப்டனாக ஜொலிக்க முடியுமா?


Abimukatheesh| Last Modified சனி, 1 ஜூலை 2017 (16:05 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனி சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து இந்திய அணிக்கு தோனி வேண்டும் என கேப்டன் விராட் கோலி கூறினார்.

 

 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
 
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் சிறப்பாக இருந்தது. ரகானே பேட்டிங் நன்றாக இருந்தது. அதேபோன்று தோனி ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் விலக நினைக்கும் போது இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். அவரது சேவை இந்திய அணிக்கு தேவை என்றார்.
 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி பகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய முன்னணி வீரர்கள் யுவராஜ் மற்றும் தோனி ஆகியோரின் பங்களிப்பு சரமாரியாக கேள்வி எழுப்பினர். சீனியர்கள் ஆகிய இவர்கள் அடுத்த உலக கோப்பை போட்டிக்குள் இந்திய அணியில் இருந்து விலக வேண்டும் என மறைமுகமாக கூறினர். 
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, தோனி இந்திய அணிக்கு தேவை என கூறியுள்ளார். பெரும்பாலும் போட்டிகளில் பாதிக்கு பின் கோலி தோனியிடம் தான் அறிவுரை கேட்டு வருகிறார். அதையும் அவர் போட்டி நிறைவடைந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிடுவார்.
 
பீல்டிங் செட் செய்வது மற்றும் பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் தோனி கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது.   


இதில் மேலும் படிக்கவும் :