ஆர் சி பி அணிக்கு பெரும் சிக்கல் – முக்கிய வீரர் காயம்!

Last Updated: திங்கள், 26 அக்டோபர் 2020 (19:00 IST)

ஆர்சிபி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நவ்திப் சைனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமீரகத்தில் நடந்துவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 14 புள்ளிகளுடன்
இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்று கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியை 84 ரன்களில் சுருட்டி எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் எளிதாகியுள்ளது. 11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் கோலி தலைமையிலான ஆர்சிபிஅணி இருக்கிறது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளரான சைனிக்கு கையில் அடிபட்டு தையல் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :