ஹர்திக் பாண்டியாவுக்கு கபில்தேவ் அட்வைஸ்

kapil
Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (13:57 IST)
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்  ஹர்திக் பாண்டியா பேட்டிங் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
 
இந்திய அணிக்கு 1883-ம் ஆண்டு உலகக்கோப்பயை பெற்று தந்தவர் கபில்தேவ். இவர் டெஸ்ட் மற்றும் ஓருநாள் தரப்பு போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார்.
 
இந்நிலையில் கபில்தேவ் இந்திய கிரிக்கெட் அணி குறித்து அளித்த பேட்டியில் பேசியதாவது, 
 
ஹர்திக் பாண்டியா மிகவும் திறமையான வீரர். அவர் மீது அழுத்தம் அதிகமாக உள்ளதாக கருதுகிறேன். எனவே அவர் தனது பேட்டிங் திறனை அதிகரித்து கொண்டால் பந்து வீச்சும் திறனும் தானாகவே வந்து விடும். இதன் மூலம் அவர் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்வார் என கூறியிருந்தார்
 
மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஆவேசமும் மற்றும் தோனியின் சாந்தமும், அணியை வழி நடத்தும் பட்சத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும். மேலும் இந்திய அணியில் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதனால். ஜடேஜா, அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :