திங்கள், 12 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2025 (13:40 IST)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!
ஐபிஎல் அணி உரிமையாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா. எல்லா போட்டிகளுக்கும் அட்டண்டன்ஸ் போடும் அவர் 2024 ஆம் ஆண்டு சீசனில் கே எல் ராகுலோடு நடத்திய வாக்குவாதத்தில் பிரபலம் ஆனார். அணிக்குள் அதிக தலையீடு செய்பவரான அவர் அதன் பிறகு ரசிகர்களால் அதிகம் கேலி செய்யப்படுபவர் ஆனார்.

இதையடுத்து அவ்வணி கே எல் ராகுலை வெளியேற்றிவிட்டு ரிஷப் பண்ட்டை 27.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் கடந்த சீசனில் அந்த அணி மிகமோசமாக விளையாடி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் அடுத்த சீசனில் அந்த அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என சொல்லப்பட்டது.

அந்த வகையில் தற்போது அந்த அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வரும் ஜாகீர் கானை நீக்கிவிட்டு அவருக்குப் பதில் நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.