வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (09:25 IST)

நெறைய டி20 விளையாடிட்டீங்க.. டெஸ்ட் மேட்சுக்கு வாங்க! – வில்லியம்சனுக்கு ஓய்வு!

இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளில் விளையாடிய கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரெண்ட் போல்டிற்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. மூன்று டி20 தொடர்கள், இரண்டு டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ள நிலையில், இதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நியூஸிலாந்து சென்றுள்ளனர். 27ம் தேதி முதல் டி20 போட்டி தொடங்கும் நிலையில் நியூஸிலாந்து வெளியிட்டுள்ள வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட் பெயர்கள் இல்லை.

இதுகுறித்து கூறியுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி திரும்பியுள்ள அவர்கள் டெஸ்ட் ஆட்டங்களில் உற்சாகத்தோடு விளையாடுவதற்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.