வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (12:45 IST)

எனக்குதான் அந்த டீம்.. ஐபிஎல் புதிய அணிக்காக போட்டி! – லாலேட்டன் Vs சல்மான் மோதல்!

ஐபிஎல் டி20 போட்டிகளில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 9வது அணியை வாங்க தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தாமதமானாலும், அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரலிலேயே தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஐபிஎல்லில் குஜராத்தை மையமாக கொண்ட புதிய அணியை உருவாக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த 9வது அணியை வாங்க சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்தி நடிகர் சல்மான் கான் இலங்கை டி20யில் ஒரு அணியை வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் புதிதாக தொடங்கப்போகும் ஐபிஎல் அணியை வாங்கவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நேரடியாக துபாய் சென்று பார்த்த மலையாள நடிகர் மோகன்லாலும் புதிய அணியை வாங்க போட்டி போட்டு வருகிறாராம். இவர்கள் மட்டுமல்லாமல் அதானி குழும தொழிலதிபர் கௌதம் அதானியும் புதிய அணியை வாங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.