வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:36 IST)

உலகக் கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்… இவர்தான் முதல் சாய்ஸ்!

இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட கே எல் ராகுல் உடல் நலக் குறைவு காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் விரைவில் வரவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான முதல் தேர்வாக கே எல் ராகுல்தான் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் என்சிஏ வில் நடந்த உடல்தகுதி தேர்வில் அவர் தன்னை நிரூபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியில் இளம்  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷானும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.