வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (09:07 IST)

பூம்ரா இல்லாத குறையைப் போக்க வருகிறார் ஜோப்ரா ஆர்ச்சர்… மும்பை அணிக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வில்லை. இதனால் அவர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் இப்போது காயம் குணமாகியுள்ள நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரைவில் நடக்க உள்ள ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார். காயம் காரணமாக மிகப்பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்காக விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக இந்த ஆண்டும் பும்ரா ஐபிஎல் தொடரை இழுக்கும் வாய்ப்புள்ள நிலையில் ஆர்ச்சரின் வருகை அந்த அணிக்கு ஆறுதலாக அமையும்.