ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (11:54 IST)

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டித் தொடர் மொத்தம் 10 நகரங்களில் நடக்கிறது. அதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்  9 இடங்களில் நடக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் 5 நகரங்களில் மட்டுமே நடக்க உள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி விளையாடும் போட்டியை மும்பையில் நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்க உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்றால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்காமல் கொல்கத்தாவிலேயே நடக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிப் போட்டியில் மோதினாலும் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் மட்டுமே நடக்கும் என சொல்லப்படுகிறது.