ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (07:48 IST)

ஜடேஜாவை அவசர அவசரமாக NCA-க்கு அனுப்பிய பிசிசிஐ!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 28 ரன்களில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் விசாகப்பட்டணத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பதில் சௌரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து எப்படியாவது அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டுமென்று பிசிசிஐ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.