1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:07 IST)

2023ல் மட்டும் 50 லட்சம் கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த இந்தியர்கள்..!

Investment
2023 ஆம் ஆண்டில் 50 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மியூச்சுவல் பண்டு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகரித்து வருகிறது என்பதும் சீரான முதலீடு மற்றும் 12 சதவீதத்திற்கு மேல் லாபம் ஆகியவை இதில் அதிகமாக முதலீடு செய்ய மக்களுக்கு ஆர்வம் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக எஸ்ஐபி என்று சொல்லப்படும் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் முறை அதிகரித்து வருகிறது . இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 50 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் எஸ்ஐபி முறையில் மட்டும் 10 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
இதன் மூலம் வங்கி சேமிப்பு முறைக்கு அடுத்தபடியாக நடுத்தர மக்களின் விருப்பமான முதலீடு முறையாக மியூச்சுவல் ஃபண்ட் மாறி உள்ளது என்றும் இது அடுத்தடுத்து வருடங்களை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran