தொடர்புடைய செய்திகள்
- 100வது ரன்னை எடுக்க ஓடிவா என ஜடேஜா கிண்டல்.. பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய ஜோ ரூட்..!
- மேட்ச்ல ஜெயிச்சாலும் டாஸ்ல லக் இல்லையே… மோசமான சாதனைப் படைத்த இந்திய அணி!
- மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பண்ட்… காரணம் என்ன?
- முதல் நாளில் இங்கிலாந்து நிதான ஆட்டம்… சதத்தை நெருங்கிய ரூட்!
- இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!
அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்… ஜாகீர் கானை முந்திய ஜடேஜா!
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஜடேஜா. ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 என அனைத்து விதமானப் போட்டிகளிலும் ஆல்ரவுண்டராகக் கலக்கி வரும் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இது அவரின் 611 ஆவது விக்கெட். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பட்டியலில் ஜாகீர் கானை முந்தியுள்ளார்.
இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே(953), அஸ்வின் (765), ஹர்பஜன் சிங் (707) மற்றும் கபில் தேவ் (687) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் இருக்க, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜடேஜா.