வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (13:36 IST)

சென்னை வந்து சேர்ந்த சி எஸ் கே தளபதி ஜடேஜா!

ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து பயிற்சியை தொடங்கினர். தோனி பத்து நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வந்ததால் ஜடேஜா அணியில் இணையாமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் சென்னை வந்து சேர்ந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை சி எஸ் கே அணி தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து வரும் 22 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.