சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்ததா அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்?- பரபரப்பு தகவல்!
இந்திய அணியில் நீண்ட ஆண்டுகளாக தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார் சஞ்சு சாம்சன்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டுக்காக விளையாட அழைத்ததாகவும், ஆனால் சஞ்சு சாம்சன் மறுத்து “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவுக்காக விளையாடுவதையே விரும்புகிறேன்” எனக் கூறிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.