ஐபிஎல்-2020; கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்...196 ரன்கள் வெற்றி இலக்கு !

Sinoj| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2020 (22:13 IST)

இந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரொனா தாக்கத்தால் துரதிஷ்டவசமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையுடன் தோற்றுள்ள நிலையில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டமும் அனல் பறக்கும் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்தனர்.

ஏற்கனவே முதல் மேட்சில் தோற்ற வெறியுடன் ஆடிய மும்பை இந்தியன் அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா 54 பந்தில் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்டியா - 18(13) அவுட் ஆனார். எனவே மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :