புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (08:47 IST)

ஆரம்பிக்குது ஐபிஎல் திருவிழா! – துபாய் புறப்பட்ட விராட் கோலி, அஷ்வின்!

துபாயில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல அணி வீரர்களும் துபாய் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த போட்டிகள் இந்த மாதத்தில் துபாயில் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து – இந்தியா இடையேயான 5வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்தானதால் இரு அணிகளை சேர்ந்த ஐபிஎல் வீரர்களும் துபாய் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். அங்கு அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாகுர் உள்ளிட்டோரும் துபாய் சென்றடைந்துள்ளனர். மீத வீரர்கள் விரைவில் துபாய் வந்தடைவார்கள் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.