செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (13:30 IST)

ஐபிஎல் ஏலம் இறுதி பட்டியல் தயார்! – 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் மொத்தமாக ஏலத்திற்கு 292 வீரர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஆண்டு இறுதி டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஏலத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவற்றில் அணிகள் குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்த நிலையில் ஐபிஎல் போட்டி ஏலத்திற்கான வீரர்கள் எண்ணிக்கை 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 125 பேர் வெளிநாட்டினர், 164 பேர் இந்திய வீரர்கள். இவர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18 அன்று நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.