செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (19:57 IST)

மணக்கோலத்தில் கிரிக்கெட் வீராங்கனை: வைரலாகும் புகைப்படங்கள்!

மணக்கோலத்தில் கிரிக்கெட் வீராங்கனை: வைரலாகும் புகைப்படங்கள்!
கடந்த சில மாதங்களாகவே வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது டிரண்டாக உள்ளது. குறிப்பாக போஸ்ட் மேரேஜ் என்ற போட்டோஷூட் சமூகவலைதளத்தில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியை சேர்ந்த வீராங்கனை ஒருவர் திருமணக் கோலத்துடன் கையில் பேட் வைத்து கிரிக்கெட் விளையாடுவது போன்ற போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்
 
வங்கதேச கிரிக்கெட் அணியின் மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம். இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் மணக்கோலத்தில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது