1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 ஆகஸ்ட் 2025 (09:02 IST)

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து  ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து ஆடிய இந்திய அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் , அதன் பின்னர் விக்கெட்களை மளமளவென இழந்தது. இதனால் அந்த அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸ் மூலம் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது, அதையடுத்து பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரை மிக விரைவாக இழந்தது. ஆனாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 75 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.  களத்தில் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும் ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் உள்ளனர். தற்போது இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.