1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:34 IST)

கலக்கிய கே.எல்.ராகுல்: நியூசிலாந்த் அணிக்கு மகத்தான இலக்கு!!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த அணி 296 ரன்கள் குவித்துள்ளது.  
 
நியுசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் ஏற்கனவே தோற்றுள்ள இந்திய அணி தொடரையும் இழந்துள்ளது. இதையடுத்த் இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு பணித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் குவித்தார். 
 
ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா, மனிஷ் பாண்டே ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். 50 ஓவர் முடிவில் இந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. 297 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியுசிலாந்து அணி விளையாட உள்ளது.