நிதானத்துடன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போடியில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை நிதானத்துடன் தொடங்கியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்து இருந்தது. இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 178 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார்.
இதையடுத்து இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ராகுல் களமிறங்கினர். ராகுல் 67 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களுடன் உள்ளனர்.