வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (13:18 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த இந்திய அணி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்ற இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
 
இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிஇந்தூரில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இந்திய அணி 3 போட்டிகளையும் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
 
இதன்மூலம், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான கதாயுதத்தை சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கினார்.