1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (13:08 IST)

அடிலெய்ட் டெஸ்ட்டுக்கான ஆஸி அணி அறிவிப்பு… உள்ளே வந்த ஸ்காட் போலண்ட்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் பலரும் புதுப்பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ராகுல் சிறப்பாக இருக்கிறார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இரண்டாவது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அல்க்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்