ஐபிஎல் லாபம்தான்.. பிசிசிஐ வரிக்கட்ட தேவையில்லை! – தீர்ப்பாயம் உத்தரவு!
பிசிசிஐ நடத்திய ஐபிஎல் போட்டிகளுக்கு வரிசெலுத்த தேவையில்லை என வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகிறது. இதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உண்டு. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும் மீத போட்டிகள் துபாயிலும் நடைபெற்றன.
இந்நிலையில் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகள் மூலமாக லாபம் கிடைத்துள்ள நிலையில் அதற்கு வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டை வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரித்த நிலையில் “ஐபிஎல் லாபகரமானதாக இருந்தாலும், அது கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. எனவே பிசிசிஐக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.