1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (07:36 IST)

ஓவர்களுக்கு இடையே 60 வினாடிகள் மட்டுமே பிரேக்.. ஐசிசி கொண்டு வரவுள்ள புதிய விதி!

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை விறுவிறுப்பாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நடத்தி முடிக்கவும் ஐசிசி சோதனை முயற்சியில் ஒரு புதிய விதியை அமலபடுத்த உள்ளது. இந்த விதியின் படி ஒரு ஓவர் முடிந்ததும், 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை பவுலிங் அணி வீசவேண்டும்.

இதை 3 முறைக்கு மேல் தவறும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் அளிக்கப்படும். டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை நடக்க உள்ள போட்டிகளுக்கு சோதனை முயற்சியாக இந்த விதியை அமல்படுத்த ஐசிசி செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு மட்டும் பொருந்தும் என சொல்லப்படுகிறது. இதற்காக கிரிக்கெட்டில் கால்பந்தை போல ஸ்டாப் கிளாக் விதிமுறை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவரை வீசி முடிக்கவில்லை எனில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே நிற்கும் பீல்டர் ஒருவரை உள்ளே அழைக்க வேண்டும் என்ற விதி நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.