புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (11:20 IST)

உலக கோப்பை டி20: தகுதி ஆட்டங்கள் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து உலக கோப்பை டி20 போட்டிக்கான தகுதி ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற இருந்தன. ஆனால் தற்போது கொரோனா வைரஸால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகுதி சுற்று ஆட்டங்களை ஒத்திவைப்பதாக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி நிர்வாகி கிறிஸ் டெட்லி “உலகம் முழுவதும் கொரோனா காரணமாக உலக நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. போட்டி நடத்துவதை விடவும் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனே எங்களுக்கு முதன்மையானது” என்று கூறியுள்ளார்.