செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 1 ஜூன் 2017 (20:04 IST)

தப்புக்கணக்கு போட்ட இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த வங்கதேசம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 305 ரன்கள் குவித்தது.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். 50 ஓவர் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்மால் 142 பந்துகளில் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஸ்பிகுர் ரஹீம் 72 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இருவரது கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இதனல் அணியின் ஸ்கோர் மளமளவென குவிந்தது.
 
இதையடுத்து இங்கிலாந்து அணி 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தற்போது இங்கிலாந்து அணி 7 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ராய் 1 ரன்னில் வெளியேறினார்.