1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (08:25 IST)

பும்ராவை சரிகட்ட புதுப் பொறுப்பை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்!

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது குறித்து ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும் ரோஹித்துக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் வீரராக பும்ரா இருப்பார் என சொல்லப்பட்டது. இப்போது பாண்ட்யா கேப்டன் ஆனதில் பும்ராவுக்கு கோபமும் வருத்தமும் இருக்கும் என தெரிகிறது. அதனால் அவரை சரிகட்ட இப்போது அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அணியில் பவுலிங் யூனிட்டை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பை அவருக்கு வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பும்ராவின் கோபம் கொஞ்சம் தணியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.