வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2023 (14:35 IST)

நானும் சளைச்சவன் இல்ல… கோலியின் செயலுக்கு பதில் கொடுத்த கங்குலி!

கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதன் பின்னர் கங்குலி, பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகியபின்னர் கோலி, ரசிகர்கள் அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனராக இருக்கிறார் கங்குலி. டெல்லி அணிக்கு எதிராக ஆர் சி பி அணி விளையாடிய போட்டி முடிந்த பின்னர், கங்குலி கோலியிடம் கைகுலுக்க வந்த போது, அவர் கைகுலுக்காமல் சென்றார். இது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் அவர் கங்குலி அன் பாலோ செய்துள்ளார். இதனால் கோலிக்கு, இன்னும் கங்குலி மேல் கோபம் குறையவில்லையோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது கங்குலியும், கோலியை இன்ஸ்டாகிராமில் அன் பாலோ செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான கோபதாபங்கள் இன்னும் குறையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.