மது விருந்தில் கூச்சல்… இங்கிலாந்து & ஆஸ்திரேலியா வீரர்களை கண்டித்த போலிஸ்!
ஆஷஸ் தொடருக்குப் பின் நடந்த மது விருந்தில் கலந்துகொண்ட ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கூச்சல் போட்டதால் போலிஸார் தலையிட்டதாக சொலல்ப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரத்தில் தங்கியிருந்த ஆஸி மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் சேர்ந்து ஹோட்டலில் நடந்த ஒரு மது விருந்தில் கலந்துகொண்டனர். விடிய விடிய நடந்த அந்த விருந்தில் கலந்துகொண்ட வீரர்கள் போதையில் கூச்சல் போட்டதாகவும், அது சம்மந்தமாக ஹோட்டலில் தங்கியிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் போலிஸாருக்கு தகவல் கூறியுள்ளனர்.
அதையடுத்து ஹோட்டலுக்கு வந்த போலிஸார் வீரர்களை பேசி அவர்களை அமைதிப்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமாக வெளியான வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்றதை அடுத்து இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் கிரஹாம் த்ரோப் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வீரர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.