திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (10:28 IST)

23 கோடியில் ஒரு பாடல்… தெலுங்கு சினிமாவுக்கு சென்றும் பாலிஸியை விடாத ஷங்கர்!

ஷங்கர் இப்போது தெலுங்கில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு புனேவில் நடந்து அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சியை மட்டும் 23 கோடி ரூபாய் செலவில் படமாக்கி உள்ளாராம் ஷங்கர். இந்த படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு ஷங்கரிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஷங்கர் இவ்வளவு செலவில் ஒரு பாடலை படமாக்கியுள்ளதாக வெளியான செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டம் என்ற பெயரில் ஷங்கர் பாடல் காட்சிகளை படமாக்குவதோடு சரி, அவரின் கதையிலோ காட்சிகளிலோ பிரம்மாண்டம் இருக்காது என்ற விமர்சனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.