வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:49 IST)

வரதட்சணை கொடுமை: கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்!

பிரபல வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தரும்படியும் கோரியுள்ளார். 
 
மொஷாடிக் ஹொசைன் சைகாத் வங்கதேச அணியின் இளம் வீரர். இவர் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் யுஏஇ-ல் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளார். 
 
இந்நிலையில், இவர் மீது இவரது மனைவி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இவருக்கு கடந்த 6 ஆண்குகளுக்கு முன்னர், உறவுக்கார பெண்ணோடு திருமணம் நடந்தது. 
 
தற்போது இவர் மனைவி, மொஷாடிக் ஹொசைன் சைகாத் தன்னிடம் 12,000 அமெரிக்க டாலர்கல் அலவிற்கு வரதட்சணை கேட்டு பல ஆண்டுகளாக கொடுமைபடுத்தி வருகிறார். மேலும், என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். 
 
கொடுமைகளை தாங்க முடியாமல் சட்ட முறைப்படி விவாகரத்து கோரினேன். ஆனால், அவர் எனக்கு விவகரத்தும் கொடுக்காமல் அலைகழித்து வருகிறார் என புகார் அளித்துள்ளார்.