திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (06:38 IST)

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
 
மொத்தமுள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், இம்ரான்கான் கட்சி தற்போது 114 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 
 
இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் இந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று  நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் ஒரு நாட்டிற்கு அதிபராகும் முதல் கிரிக்கெட் வீர்ர் என்ற பெருமையை பெறுவார்