எங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் - கோலி வேண்டுகோள்

kholi
Last Modified புதன், 15 ஆகஸ்ட் 2018 (15:56 IST)
இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இது இந்தியா சந்தித்துள்ள மோசமான தோல்வியாகும். 
 
டெஸ்ட் தொடரில், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோற்று 0-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன், விராட் கோலி, போட்டிகளில் சில சமயம் ஜெயிக்கிறோம். சில சமயம் தோற்று, அந்த தோல்வியின் வாயிலாக பாடம் கற்கிறோம். 
 
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்காக, நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். நாங்களும் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எப்போதும் இழக்கமாட்டோம். வரும் ஆட்டங்களில் கடுமையாக முயற்சித்து வெற்றி காண்போம் என கோலி பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :