திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (17:22 IST)

நடராஜன் ஏன் விளையாடவில்லை என்று பாண்டிங் கேட்கிறார்- தினேஷ் கார்த்திக் பெருமிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். விரைவில் இந்திய அணிக்காக அவர் மீண்டும் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நடராஜன் தான் சார்ந்துள்ள கிரிக்கெட்டுக்கு மைதானம் கட்டியுள்ளது பெரிய விஷயம். அதன் மூலம் அவர் சமுதாயத்தை முன்னேற செய்கிறார். சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை செலுத்தியுள்ளார் நடராஜன். அண்மையில் நான் மேத்யூ ஹெய்டன் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரிடம் பேசிய போது ஏன் நடராஜன் ஐபிஎல்-க்கு பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை என கேட்டனர். அந்த அளவுக்கு அவர் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.