1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (14:46 IST)

நடராஜனின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு! வைரல் புகைப்படங்கள்..!

சேலத்தில் நடராஜனின் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதில் யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த நடராஜன் தனது கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த மைதானத்தை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
 
இந்த நிலையில் இந்த மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்த பிறகு அதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், நடராஜன் உள்ளிட்டோர் விளையாடினார். அவர்களுடன் நடிகர் யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்பட ஒரு சிலரும் கிரிக்கெட் விளையாடினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
 
Edited by Siva