நெருப்புடா! சாதனை மேல் சாதனை படைக்கும் தோனி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 4 ஜனவரி 2017 (21:03 IST)
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் சாதனை மேல் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
 
 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
 
அதிக தொடர்கள் வெற்றி:
 
தோனி தலைமையில், மூன்று மற்றும் மூன்றிற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றுவது மூன்றாவது முறையாகவும். இதன் மூலம் மூன்று முறை முழுமையாக கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
 
இதற்கு முன்னதாக தோனி தலைமையில், 2008-09 ஆம் ஆண்டுகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரையும், அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011-12 ஆண்டுகளிலும் தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்தது.
 
அதிக ஒருநாள் போட்டிகள் வெற்றி:
 
அதேபோல், நேற்றைய போட்டியுடன் தோனி தலைமையிலான இந்திய 107 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்  இந்த பட்டியலில் 165 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
 
அதிக நபர்கள் வெளியேற்றம்:
 
நேற்றைய போட்டியின் 33ஆவது ஓவரில், ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா (0) ஜாஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 வீரர்களை வெளியேற செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். 278 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 261 கேட்சுகள் மற்றும் 89 ஸ்டெம்பிட்டுகளை செய்துள்ளார்.
 
முதல் இடத்தில், இலங்கையின் குமார் சங்ககாரா [404 போட்டிகள், 482 அவுட்டுகள், 383 கேட்சுகள், 99 ஸ்டெம்பிட்டுகள்], இரண்டாவது இடத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் [287 போட்டிகள், 472 அவுட்டுகள், 417 கேட்சுகள், 55 ஸ்டெம்பிட்டுகள்] மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிடிக்காவின் மார்க் பவுச்சர் [295 போட்டிகள், 424 அவுட்டுகள், 402 கேட்சுகள், 22 ஸ்டெம்பிட்டுகள்] உள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :