செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (08:52 IST)

தேசிய கொடி பொறித்த கேக்கை வெட்டுவது குற்றமா? நீதிமன்றம் பதில்!

தேசியக்கொடி பதித்த கேக்கை வெட்டுவது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேசியக்கொடி பொறித்த கேக்கை வெட்டியதாக, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்தது கோவை நீதிமன்றம்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தேசிய கொடி பதித்த கேக்கை வெட்டுவது ‘தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971இன் பிரிவு 2இன் கீழ் குற்றமாகக் கருத முடியாது’ எனவும் கூறியுள்ளது.