திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (13:49 IST)

ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்: ஓவைசி

Ovaisi
ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என ஓவைசிதெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இந்தியாவிலும் ஒரு நாள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஹிஜாப் அணியும் பெண் பிரதமராக வருவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஓவைசி தெரிவித்துள்ளார் 
 
பாஜக முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்று முஸ்லிம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும் பாஜக கருதுகிறது என்றும், முஸ்லிம் மதத்துக்கு எதிரானது பாஜக என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார் 
இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான செயல் திட்டம் என்றும் ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வந்து அனைத்தையும் மாற்றுவார் என்று ஓவைசி குறிப்பிட்டார்
 
Edited by Mahendran