செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 மே 2022 (10:22 IST)

”மன்னிச்சிடுங்க”… போட்டி முடிந்ததும் மில்லரின் வைரல் டிவீட்!

டேவிட் மில்லர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது என்பதும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதையும் பார்த்தோம். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை  என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீசினார் .

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை  என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீசினார். பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்து டேவிட் மில்லர் வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சீசன்களாக மோசமான ஃபார்மில் இருந்த அவர் மீண்டும் இந்த போட்டியில் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் அவர் தான் கடந்த ஆண்டு விளையாடிய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குறிப்பிட்டு “மன்னித்துவிடுங்கள்.. ராயல்ஸ் குடும்பம்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.