Daily Horoscope
✕

இது நடந்தால் மட்டும்தான் சிஎஸ்கே அணி தோனியைத் தக்கவைக்குமாம்… அது என்ன?

Written By vinoth
Updated: செவ்வாய், 30 ஜூலை 2024 (08:58 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது.

உடனடியாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இங்கிலாந்துக்கு அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சி எஸ் கே அணி நிர்வாகிகள் அவர் விளையாடுவார் என்றே உறுதியாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் அதிக அளவிலான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும்படியாக விதியை மாற்ற சொல்லிக் கோரியுள்ளனர். அதற்கு பிசிசிஐ சம்மதிக்குமா என்ரு தெரியவில்லை. இந்நிலையில் அப்படி பிசிசிஐ சம்மதித்தால் மட்டுமே தோனியை, சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments